விவசாயக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன !


பாலமுனையிலுள்ள விவசாயக் கல்லூரியில் 2016ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழி மூல விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒரு வருட தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி, விஞ்ஞானம், கணிதம் ஆகிய 03 பாடங்களில் திறமைச் சித்தியுடன் 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருக்க வேண்டுமென்பதுடன், கல்விப் பொதுத்தராதர உயர்தர விஞ்ஞானப் பிரிவில் ஏதாவதொரு பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
விவசாயத் திணைக்களத்தினால் நடத்தப்படும் இக்கற்கைநெறிக்கும் 17 வயது முதல் 25 வயதுவரையான இருபாலாரும் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கமுடியும். எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னராக பணிப்பாளர், விரிவாக்க மற்றும் பயிற்சிப்பிரிவு, விவசாயத் திணைக்களம், பேராதனை எனும் முகவரிக்கு விண்ணப்பப்படிவங்களை அனுப்பிவைக்குமாறு பாலமுனை விவசாயக் கல்லூரியின் அதிபரும் உதவி விவசாய பணிப்பாளருமான எம்.எப்.ஏ.சனீர், இன்று ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன ! விவசாயக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன ! Reviewed by News on Friday, January 01, 2016 Rating: 5
Powered by Blogger.