கோட்டக் கல்வி அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்.
கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள கோட்டக் கல்வி அதிகாரி பதவிகளுக்கு தகுதியானோரை நியமிப்பதற்கு மாகாணக் கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை முஸ்லிம் பிரிவு, கல்முனை தமிழ்ப் பிரிவு, திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆலையடிவேம்பு, கிண்ணியா கல்வி வலயத்தில் கிண்ணியா, குருஞ்சாங்கேணி ஆகிய ஐந்து கோட்டங்களுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை தத்தமது வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக சமர்ப்பிக்க முடியுமென்பதுடன், இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகஸ்தர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
கோட்டக் கல்வி அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்.
Reviewed by News
on
Friday, January 01, 2016
Rating:
